‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த கிராமப்புற வீதி புனரமைப்பிற்காக மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்கள் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!

‘டித்வா’ சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.

250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இப் புதிய பாலத் தொகுதி, இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரழிவிற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தின் மற்றொரு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரி கே, இப் பாலத் தொகுதியைச் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

போக்குவரத்து அமைச்சின் கூற்றுப்படி, இந்தியா இதற்கு முன்னர் வழங்கிய இரண்டு பாலத் தொகுதிகளுக்கு மேலதிகமாக, 5 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய 5 மொடுலர் (Modular) பெய்லி பாலங்கள் இந்த மூன்றாவது நன்கொடையில் அடங்கியுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects