இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக 11.08.2026 அன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அவர் இதன்போது உறுதியளித்தார்.
தூதுவர் வெய் தனது நியமனத்தை மாபெரும் கௌரவமாகவும் பாக்கியமாகவும் கூறியதுடன், இலங்கையின் செழுமையான வரலாறு, இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பும் மக்கள் குறித்துத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
நூற்றாண்டுகால கடல்சார் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மற்றும் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டது முதல் இருதரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர் முன்னிலைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









