இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் வரலாற்றில், வசந்தி முருகேசு ‘விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின்’ முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட நிலையில் விமானநிலையப் பாதுகாப்பு மற்றும் மார்ஷல் துறையில், முதன்முறையாக ஒரு பெண் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள இச்சாதனை, எதிர்கால இளம் பெண்களுக்குப் பெரும் ஊக்கமாகவும் முன்மாதிரியாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









