கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புபயிற்சித் திட்டத்திற்கு 64 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கிணங்க, இது தொடர்பான நியமனக் கடிதங்கள் மற்றும் ஆட்சேர்ப்புக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 13.08.206 அன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் உயிரியில் மருத்துவ பொறியியல் பிரிவின் புதிய நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
சுகாதார சேவையில் இணையும் ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை ஒரு அரசாங்கப் பதவியைத் தேடுபவராகக் கருதாமல் , ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைக் குணப்படுத்துவதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக்குவதற்கும் பங்களிக்கும் ஒரு அரிய வாய்ப்பாகக் கருத வேண்டுமென தெரிவித்தார்.
சுகாதார சேவையின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தற்போது அவசர ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதாகவும், சுகாதார சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இந்த ஆட்சேர்ப்புகள் அத்தியாவசியமானவை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார சேவைக்கான ஆட்சேர்ப்பு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளையில், பதவி உயர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப தற்போதைய அரசு அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டிற்குத் தேவைப்படுவது ஒரு திறமையான அரச சேவையே என சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்போது, எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சுகாதார சேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி எந்த வகையிலும் குறைக்கப்படாது என வலியுறுத்திய அமைச்சர், சுகாதார கட்டமைப்புக்கு நவீன தொழில்நுட்பம், நவீன மருத்துவ உபகரணங்கள், கட்டட வசதிகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









