கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறுந்திரைப்பட அனுபவப் பகிர்வு நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் காஞ்சிரங்குடா கால்நடை பண்ணையாளர்கள் பயிற்சி நிலைய மண்டபத்தில் 17-12-2023 அன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ் அனுபவப் பகிர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த குறும்படக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறும்படங்கள், காணொளிப் பாடல்கள், முழுநீளத் திரைப்படங்கள் போன்ற படைப்புகளை ஊக்குவிக்கவும் அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தவும் இந்த அனுபவப் பகிர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக பணிப்பாளர் நவநீதன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் மற்றும் காணொளிப் பாடல்களை இயக்கிய அனுபவமிக்க கலைஞர்களான கோடீஸ்வரன், தேவ அலோசியஸ், டிலோஜன், அகரம் துஜியந்தன் மற்றும் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டு திரைப்படங்கள் தொடர்பான தமது அனுபவங்களையும், நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் குணபாலா மற்றும் திருக்கோவில் கலாசார உத்தியோகத்தர் மதனசீலன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…