நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.95% ஆனோர், அதாவது 49,163 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 19,778 (21.30%) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18,433 (19.85%) நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 (7.21%) நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தொடர்ந்து டெங்கு அதி அபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects