சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய வேண்டுமாயின், அது தொடர்பில் பொறுப்புக்கூறும் அனைத்து அரச நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழித்து சமூக வலுவூட்டல் மற்றும் பொருளாதார நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகச் செயற்படுத்தப்படும் “சமூக சக்தி” திட்டத்தின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று (24.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
“சமூக சக்தி” திட்டத்திற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 பில்லியன் ரூபாயில், 23 பில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி சுமார் 23,000 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அனைத்துத் திட்டங்களையும் இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு விசேட மாதிரித் திட்டங்கள் (Model Projects) மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2,000 மில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அத்திட்டங்களின் மூலம் அடையாளம் காணப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் சமூக சக்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.Government
நிர்வாக விடயங்களின் கீழ், சமூக அபிவிருத்தி சபைகளுக்காக சமூக வலுவூட்டுகை அதிகாரிகள் நியமித்துள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தரவு சேகரிப்புக்காக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்திற்கு சமூக வலுவூட்டுகை அதிகாரிகளின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும், இதன்போது கிராமிய மட்டத்தில் தரவுத் தொகுப்புச் செயல்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகளிடையே முரண்பாடுகள் ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக சக்தி செயலகத்தினால் திட்டமிடப்பட்ட நுண் அளவிலான தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுத் திட்டம், சமூக அபிவிருத்தி சபைகளின் மதிப்பீடு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், திறன் விருத்தி பயிற்சித் தொகுதிகளைத் தயாரித்தல் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், சமூக சக்தி வழிகாட்டல் கையேடுகளை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், சமூக தரவுத் தொகுப்பு கையேட்டை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், அத்துடன் சமூக சக்தி மூன்று வருட மூலோபாயத் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சக்தி தேசிய தரவு மற்றும் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன், அதற்கான தரவு மற்றும் தகவல்களை உள்ளீடு செய்வதற்கு சமூக அபிவிருத்தி சபை அதிகாரிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளையும் உடனடியாக ஈடுபடுத்துமாறு அமைச்சர் இங்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் (VDP) முழுமையாக இந்த தரவு கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக உடனடியாக பிரதேச செயலக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டது. இதன் முதலாவது திட்டம் எதிர்வரும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் புத்தளம் மாவட்டத்திலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார இங்கு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தேசிய மட்டத்தில் நிலவும் நெருங்கிய ஒருங்கிணைப்பானது, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொறுப்புக்கூறும் அனைத்து நிறுவனங்களையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்புடன் தேசிய இலக்குகளை நோக்கி வழிநடத்துவது சமூக சக்தி திட்டத்தின் பொறுப்பாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே இங்கு வலியுறுத்தியுள்ளார்.
சமூக சக்தி செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகசக்தி திட்டத்தின் இவ்வருட பணிகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டிற்கான திட்டமிடல்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரீநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இந்திகா அமரசிங்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் மேலதிக செயலாளர் மேனக ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சு மற்றும் சமூக சக்தி செயலகத்தின் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய வேண்டுமாயின், அது தொடர்பில் பொறுப்புக்கூறும் அனைத்து அரச நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழித்து சமூக வலுவூட்டல் மற்றும் பொருளாதார நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகச் செயற்படுத்தப்படும் “சமூக சக்தி” திட்டத்தின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் திங்கட்கிழமை (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
“சமூக சக்தி” திட்டத்திற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 பில்லியன் ரூபாயில், 23 பில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி சுமார் 23,000 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அனைத்துத் திட்டங்களையும் இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு விசேட மாதிரித் திட்டங்கள் (Model Projects) மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2,000 மில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அத்திட்டங்களின் மூலம் அடையாளம் காணப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் சமூக சக்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.Government
நிர்வாக விடயங்களின் கீழ், சமூக அபிவிருத்தி சபைகளுக்காக சமூக வலுவூட்டுகை அதிகாரிகள் நியமித்துள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தரவு சேகரிப்புக்காக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்திற்கு சமூக வலுவூட்டுகை அதிகாரிகளின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும், இதன்போது கிராமிய மட்டத்தில் தரவுத் தொகுப்புச் செயல்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகளிடையே முரண்பாடுகள் ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக சக்தி செயலகத்தினால் திட்டமிடப்பட்ட நுண் அளவிலான தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுத் திட்டம், சமூக அபிவிருத்தி சபைகளின் மதிப்பீடு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், திறன் விருத்தி பயிற்சித் தொகுதிகளைத் தயாரித்தல் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், சமூக சக்தி வழிகாட்டல் கையேடுகளை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், சமூக தரவுத் தொகுப்பு கையேட்டை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், அத்துடன் சமூக சக்தி மூன்று வருட மூலோபாயத் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சக்தி தேசிய தரவு மற்றும் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன், அதற்கான தரவு மற்றும் தகவல்களை உள்ளீடு செய்வதற்கு சமூக அபிவிருத்தி சபை அதிகாரிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளையும் உடனடியாக ஈடுபடுத்துமாறு அமைச்சர் இங்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் (VDP) முழுமையாக இந்த தரவு கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக உடனடியாக பிரதேச செயலக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டது. இதன் முதலாவது திட்டம் எதிர்வரும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் புத்தளம் மாவட்டத்திலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார இங்கு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தேசிய மட்டத்தில் நிலவும் நெருங்கிய ஒருங்கிணைப்பானது, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொறுப்புக்கூறும் அனைத்து நிறுவனங்களையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்புடன் தேசிய இலக்குகளை நோக்கி வழிநடத்துவது சமூக சக்தி திட்டத்தின் பொறுப்பாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே இங்கு வலியுறுத்தியுள்ளார்.
சமூக சக்தி செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகசக்தி திட்டத்தின் இவ்வருட பணிகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டிற்கான திட்டமிடல்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரீநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இந்திகா அமரசிங்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் மேலதிக செயலாளர் மேனக ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சு மற்றும் சமூக சக்தி செயலகத்தின் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()