ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் நாட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சர்வதேசப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. 

2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர். 

குறிப்பாக, 16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. 

ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 374,820 வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முழு ஆண்டுக்கான முதன்மைச் சந்தையாகவும் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. 

அதே காலப்பகுதியில், 147,089 வருகைகளுடன் பிரித்தானியா அடுத்த இடத்திலும், 98,801 சுற்றுலாப் பயணிகளுடன் சீனா அடுத்த இடத்திலும் உள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects