இலங்கையில் பால் உற்பத்திக் கைத்தொழிலை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு நியூசிலாந்து முன்வந்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் 30.07.2024 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் ஃபைன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உயர்தர பசுக்களின் தட்டுப்பாடு மற்றும் மாடுகளின் விந்தணுக்களை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் விளையும் அன்னாசி மற்றும் மாம்பழங்களை நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஆதரவுகளை வழங்குவதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇