உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள ருமேஷ் தரங்க!

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாகவே இந்த முதலிடத்தைப் அவரால் பெற முடிந்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று ருமேஷ் தரங்க வெற்றி பெற்றார்.

புதிய தரவரிசையின்படி, ருமேஷ் தரங்க 1,363 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுடன், இதுவரை முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வெபர் தற்போது பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 1,342 ஆகும்.

லோசான் சுற்று ஆரம்பமான போது வெபர் உலகத் தரவரிசையில் முதலிடத்திலும், ருமேஷ் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

இருப்பினும், இப்போட்டியில் பங்கேற்பதில்லை என வெபர் கடைசி நேரத்தில் தீர்மானித்தார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத் திறமையை வெளிப்படுத்தி ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects