நாட்டில் நிலவும் தொடர் கடும் மழையினால் காலி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 3 ஆம் நிலை (சிவப்பு) அதிதீவிர மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (24.09.2026) பிற்பகல் 1:00 மணி முதல் நாளை நாளை (25.09.2026) பிற்பகல் 1:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி – நெலுவ, நியாகம, தவலம மற்றும் நாகொட
கண்டி – பாஸ்பாகே கோரள
நுவரெலியா – கொத்மலை மேற்கு, கிழக்கு மற்றும் அம்பகமுவ
3 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், சரிவுகளில் உள்ள மரங்கள் மற்றும் மண் சரிதல், சுவர்களில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது சேறாக மாறுதல் போன்ற நிலச்சரிவுக்கான முன்அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கும் அவசரகாலப் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மலைப்பாங்கான மற்றும் பாறைச் சரிவுகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் இரவு வேளைகளில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










