இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26 ஆவது இடத்திலிருந்து 20 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4.44 மில்லியன் TEU கொள்கலன்களை கையாண்டுள்ளதுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இக் காலப்பகுதியில் கையாளப்பட்ட மொத்த கொள்கலன்களில் பெரும்பகுதி மறுகப்பல் (Transshipment) நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய இந்து சமுத்திர மறுகப்பல் மையமாக கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இந்த முன்னேற்றம் மேலும் உறுதிப்படுத்துவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் கடல்சார் மற்றும் பொருளாதார இலக்குகளை முன்னெடுப்பதில் முக்கிய மைல்கல்லாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








