மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன் விசேட சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைப் பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினரின் வழிகாட்டலிலும் மேற் பார்வையிலும் இத் தூய்மைப்படுத்தல் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவமனைச் சூழலை சுகாதாரமான முறையில் பேணும் பொருட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் பல்வேறு அரச நிறுவனங்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இதில் மருத்துவமனை ஊழியர்கள் (Hospital Staff), மாநகர சபை (Municipal Council), மரக்கூட்டுத்தாபனம் (Timber Corporation), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊழியர்கள் (RDHS Staff), நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் (Well-wishers) ஆகியோர் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மருத்துவமனை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள், புதர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றி துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
இக் கூட்டுப் பங்களிப்பானது மருத்துவமனையின் தூய்மையைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வையும் நிறுவனங்களுக்கிடையிலான நல்லுறவையும் வெளிப்படுத்தும் சிறந்த உதாரணமாக அமைந்தது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










