ஒரு வாரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் ரூ. 408 மில்லியனுக்கும் அதிக வருமானம்!

கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects