கடலோர புகையிரத பாதை புனரமைப்புப் பணிகள் துரிதம்!

கடலோர புகையிரதப் பாதை புனரமைப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பானந்துறை முதல் கொம்பனித்தெரு வரையிலான இரட்டை புகையிரதப் பாதை அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக, ரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் புதிய புகையிரதத் தண்டவாள இணைப்பு நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிலையத்தின் பணிகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன 31.08.2026 அன்று அங்கு விஜயம் செய்தார்.

இலங்கையின் புகையிரதப் பாதை கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10,000 புகையிரத தண்டவாளங்களில் ஒரு பகுதி, இந்த புதிய நிலையத்தில் இணைக்கப்பட்டு தயார்படுத்தப்படவுள்ளது.

கடலோர புகையிரத பாதையின் இலக்கம் 8 பாதை உவர்நீர் அரிப்பினால் அடிக்கடி சேதமடைவதால், குறுகிய காலத்திற்குள் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது தண்டவாளங்களைப் பொருத்துவதற்கு செலவாகும் நேரத்தை குறைப்பதற்கு இந்த புதிய திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதுடன், ரயில்களை உரிய வேக வரம்புகளுக்குள் இயக்குவதற்கும் முறையான தண்டவாளப் பொருத்தல் செயல்முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது புகையிரதத் திணைக்களத்தின் கீழ் ரயில் தண்டவாள இணைப்புப் பணிகளுக்காக ராகம – ஹொரப்பே பகுதியில் மாத்திரமே ஒரு நிலையம் இயங்கி வருவதால், இரத்மலானையில் புதிய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பணிகளை மேலும் விரைவாக முன்னெடுக்க முடியும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects