வெளியிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம்!

அரசியல் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “சமூகப் பாதுகாப்பு” தொடர்பான யோசனைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளதாகத் தொழிலும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்காக அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் தொழில்நுட்ப விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படும் இத் திட்டம் தொழில், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் உள்ளிட்ட பல அமைச்சுகள் இணைந்து முன்னெடுக்கின்றன.

இந்நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பணிப்பாளர் ஜோனி சிம்ப்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects