இன்றைய பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல – பிரதமர்

காலநிலை நடவடிக்கைகள், விவசாயப் புத்தாக்கம், உணவு விரயத்தைக் குறைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிலையான உணவு முறைமைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தல்

ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ள இன்றைய பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எமது விழிப்புணர்வை கூட்டுச் செயல்பாடாகவும், எமது பொறுப்புகளை அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பூட்டானில் 01.09.2026 அன்று நடைபெற்ற உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில், “தருணத்திற்கு ஏற்றவாறு எழுச்சி பெறுதல்: பலவித நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதத்தில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறையில் புத்தாக்கங்களை ஏற்படுத்துதல், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் நியாயமான உணவு முறைமைகளை உருவாக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து முன்னோக்கிச் செல்லும் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சர்வதேச ஒத்துழைப்பு, காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகலை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects