2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ ஊடாக பார்வையிட முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் 9 ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

இதில் மொத்தமாக 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அவர்களில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects