டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிப்பு!

டித்வா புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, 2026 ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, குழுவினால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளை அறிக்கையிட மேலதிக காலம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் குறித்த விசேட குழு தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இவ்வாறு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects