மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக 14.09.2026 அன்று வருகை தந்தனர்.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ திட்டத் தொடருக்கு அமைவாகவே இப்பாடசாலைக்கு இச்சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது.
ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்ட பின்னர், பாராளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சமூதாயத்திற்கு தலைமை தாங்கும், உலகை மாற்றுவதில் கவனம் செலுத்தும் ஓர் எதிர்காலச் சந்ததியை உருவாக்குவது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.
உலகின் அறிவாற்றலை கையகப்படுத்துவதற்கு எதிர்காலப் பிள்ளைகளைத் தயார்படுத்துவதுடன், நாட்டிற்குப் பயனுள்ள தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் அதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இத்திட்டத்திற்கு இணையாகச் சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மேற்படி பாடசாலைக்கு பெறுமதிமிக்க மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முப்படை பாதுகாப்பு ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










