பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகாரசபை

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (கோப் குழு) உப குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன இத் தகவலை வெளிப்படுத்தினார்.

 ‘தற்போது உண்மையில் தேங்காய் எண்ணெயில் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வரைவு செய்து வைத்துள்ளோம், அது விரைவில் வெளியிடப்படும். அந்த வர்த்தமானிக்கு அமைவாக, இனிவரும் காலங்களில் தேங்காய் எண்ணெய் பொட்டலமிட்டு விற்பனை செய்யவே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏனெனில் திறந்த நிலையில் விற்பனை செய்வதனாலேயே அதிகளவில் கலப்படம் நடைபெறுகிறது.   மேலும், பொட்டலமிட்டு வரும்போது அதற்கு ஒரு தனித்துவம் / அடையாளம் இருக்கும். தற்போது அது யாருடைய தயாரிப்பு, எங்கிருந்து வருகிறது, என்ன செய்யப்பட்டு வருகிறது, சுத்திகரிக்கப்பட்டு வருகிறதா அல்லது கலப்படம் செய்யப்பட்டு வருகிறதா என்பதை அடையாளம் காண முடிவதில்லை.   அந்த லேபிளில்  தயாரிப்பின் பெயர், எடை, விலை, காலாவதியாகும் திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் விபரங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.’  

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects