நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 18.06.2024 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து சித்தியடைந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் தொழிற்பயிற்சி தாமதமானது.
இதன்படி கடந்த 3ஆம் திகதி முதல் ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பட்டதாரிகள் 207 பேருக்கு 67,500 ரூபாய் என்ற மாதாந்தக் கொடுப்பனவுடன் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 153 பட்டதாரிகளுக்கான பயிற்சி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி 418 பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளத
இதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.
அதேநேரம் சுதேச வைத்திய அமைச்சும், ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து தற்போது பாரம்பரிய வைத்தியர் பதிவுகளை நாட்டில் விரிவுபடுத்தி வருகின்றன.
இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரை பதிவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇