மாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 21.09.2026 அன்று நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இணைந்து பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள 13 நிரந்தர பாலங்களில் முதலாவது பாலமாக மொரகஹகந்த பாலம் அமைக்கப்படவுள்ளது.
சூறாவளி டித்வாவைத் தொடர்ந்து, இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் டொலர் பெறுமதியான புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
175 மீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட இந்தப் புதிய பாலம், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு இடையிலான முக்கிய இணைப்பை ஏற்படுத்துவதுடன், அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கும் உதவியாக அமையும்.
இந்தப் பாலம் இலங்கையில் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் இந்திய அரச துறை நிறுவனமான IRCON International Limited நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அவசரகால மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் இருந்து, எதிர்கால அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய நிலையான மற்றும் வலுவான உட்கட்டமைப்பை உருவாக்கும் அடுத்த கட்டத்திற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









