வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்!

2026 ஆம் ஆண்டின் 01 மற்றும் 02 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஒழுங்குவிதிகளின் கீழ், இலங்கையர்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள், புலம்பெயர்ந்தோரின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வழிமுறைகள் (Migrant Allowance) மற்றும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான வெளிநாட்டு முதலீட்டு எல்லை 0.75 மில்லியன் அமெரிக்க டொலராகவும், பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு 0.2 மில்லியன் டொலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்பு 6 மாத காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைவதற்கேற்ப எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என்றும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், வெளிநாட்டுச் செலாவணி சட்டவிரோதமான முறையில் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு, வங்கிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் தரவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் குறைத்து, நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அளவுக்கு அதிகமாக விதிகளைக் கடுமையாக்குவது உள்நாட்டு வர்த்தகர்களை சோர்வடையச் செய்யும் என சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, வெளிச்செல்லும் செலாவணியைக் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்துவது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுச் செலாவணியின் அளவையும் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக எச்சரித்தார்.

இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects