மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஷ்வரனின் ஏற்பாட்டில் மகளிர் அபிவிருத்தி நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜே.எஸ்.ஜோதி இணைப்பாக்கத்தில் பிராந்திய சுகாதார பணிமனையில் 19.06.2026 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட, 68 சிறுவர்களுக்கு இச்சாதனங்கள் இதன் போது வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் 9820 விசேட தேவையுடையோர்களில் 2435 பேர் பிறப்பிலிருந்து 18 வயதெல்லைக்குள் காணப்படுகின்றனர்.

இவர்களுக்கான பல்வேறு உதவித்திட்டங்கள் மாவட்ட செயலத்தினுடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் Help them walk எனும் தொனிப்பொருளில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான சாதனங்கள் CAL Foundation நிதியுதவியுடன் Centre for Handicapped நிறுவனம் மேற்கொண்டது.

இந் நிகழ்வில் P&O தலைமைய உத்தியோகத்தர் எஸ்.எஸ்.அத்தநாயக்க மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஜீ.தனுஷ்க டிலான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects