2027ஆம் ஆண்டு முதல் கண்டி நகரில் மெட்ரோ அர்பன் லக்ஸரி டிரான்ஸ்போர்ட் (Metro Urban Luxury Transport) பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்பகட்ட திட்டமிடல் நடவடிக்கைகள் இன்று (15.10.2026) தொடங்கின.
சாத்தியமான பேருந்து பயண வீதிகள் மற்றும் செயற்பாட்டுத் தேவைகளை மதிப்பிடுவதற்காக மெட்ரோ பேருந்து ஒன்று சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, பொருத்தமான வழித்தடங்களை அடையாளம் காண்பது, தேவையான பேருந்து விபரக் குறிப்புகளைத் தீர்மானிப்பது மற்றும் சாத்தியமான பேருந்து நிறுத்த அமைவிடங்களை மதிப்பிடுவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டு கண்டி நகரில் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









