எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தற்போது மின்சாரக் கட்டணம் தொடர்பான வரைபை தயாரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இறுதி வரைவு அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபை முன்மொழிவை சமர்ப்பித்த பின்னர், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇