இலங்கை – ஐரோப்பிய ஒத்துழைப்பு பலப்படுத்தும் வகையில் பதில் வெளிவிவகார அமைச்சர் அருன் ஹேமசந்தந்திராவிற்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிரேஷ்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் சர்வதேச கூட்டணியின் ஆசிய, மத்திய ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பணிப்பாளர் (Pēteris Ustubs) பதில் வெளிவிவகார அமைச்சர் அருன் ஹேமசந்தந்திரா சந்தித்து கலந்துரையாடினார்.
2025 நவம்பர் பிரெசல்ஸில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு இணைவாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க சக்திவளம் , துறைமுகங்களின் உட்கட்டடமைப்பு அபிவிருத்தியில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒன்றித்திருக்கும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புக்களை இனங்காண்பது குறித்தும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களை இதன்போது பரிமாறிக்கொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







