சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 23,600 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (20.10.2026) கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ .ஜே .எஸ். எஸ் எதிரிசூரிய தெரிவிக்கையில்,
ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பேட்டின்படி நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் அதாவது 46,012 பேர் நேர்முகப்ட பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும்.
எனினும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட நேர்முக பெயர் பட்டியலில் 17,688 பேரின் பெயர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்த தொடர்பில் எழுந்த கேளிவிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே விண்ணப்பதாரர் பல பாடங்களுக்கும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் வெவ்வேறு ஆசியர் பதவிகளுக்கு தகுதிப் பெற்றிருக்கலாம் என்பதால் பட்டியலில் உள்ள பெயர்களின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு தகுதியானவர்களின் எண்ணிக்கையை மதிப்பிட முடியாது.
இதன்படி, அனைத்து பாட இணைப்புக்களையும் ஒன்றுக்கு மேறபட்ட தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட போது ஏறத்தாழ 46,012 பேர் நேர்முக பரீட்சைக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
இதேவேளை 41 பாட இணைப்புகளுக்கு எந்தவொரு விண்ணப்பதாரரும் தகுதிப் பெறவில்லை. மேலும் 124 பாட இணைப்புகளுக்கு போதிய தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை. இதனால் சில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








