கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைப் நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்னணு பயணச்சீட்டு முறைமை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டம் இலங்கையின் முக்கிய புகையிரத போக்குவரத்து மையங்களில் ஒன்றான கோட்டை புகையிரத நிலையத்தை, சர்வதேச தரத்திலான போக்குவரத்து மையமாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் சுமார் 2,162 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனும் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடனும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நவீன பயணிகள் மேம்பாலங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மூன்று மாடிகளைக் கொண்ட பயணிகள் சேவை கட்டடம் ஆகியவை இத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் வசதிக்காக தானியங்கி பயணச்சீட்டு முறைமை மற்றும் மின்னணு நுழைவு – வெளியேறும் வசதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பயணிகளுக்கான ஓய்விடங்கள், உணவகங்கள், நவீன சுகாதார வசதிகள், தகவல் மையம், மருந்தகம் மற்றும் தபால் சேவை மையம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை புகையிரத நிலையத்தின் தொன்மையைப் பாதுகாத்து, பயணிகளுக்கான சேவைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த அபிவிருத்திப் பணிகளை 15 மாதங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









