சீரற்ற காலநிலை காரணமாக வீதி விபத்துகளின் எணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்

தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நிகழும் பாரிய விபத்துக்கள் குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாதிர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த அவர்,

மழை பெய்யும் போது மட்டுமன்றி, மழைக்கு முன்னரான இருண்ட வானிலை நிலவும் சூழலிலும் வீதி விபத்துக்கள் நிகழும் அபாயம் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சீரற்ற வானிலை மற்றும் இருண்ட தன்மை காரணமாக வீதியை பார்வையிடுவதற்கான திறன் குறைவதால், எதிரே வரும் வாகனங்கள் அல்லது வீதியிலுள்ள தடைகளை தெளிவாக அடையாளம் காண்பது கடினம் என அவர் கூறினார்.

இதனால், அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் உட்பட அனைத்துச் சாரதிகளும் சீரற்ற காலநிலையின் போது அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவசர நிலையின் போது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய பாதுகாப்பான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறும், அதிவேகப் பாதைகள் மற்றும் ஏனைய வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் முறையாக ஆசனப் பட்டைகளை (seat belts) அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், பார்வைத் திறன் குறைவதால் முன்னாலும் பின்னாலும் வரும் வாகனங்களைக் கவனிப்பது குறைவாக இருக்கும் என்பதால், பாதையின் வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையே போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பேணுவது அவசியம் என்றும் கூறினார்.

குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பாதுகாப்பான தலைக்கவசங்களை அணிவதுடன், இரவு மற்றும் இருண்ட வானிலையில் பார்வைத் திறனை அதிகரிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதும், ஏனைய வாகனங்களுடன் சரியான இடைவெளியைப் பேணுவதும் அவசியமாகும்.

அதிவேகம், குறைந்த பார்வைத் திறன் மற்றும் மழை காரணமாக வீதியில் ஏற்படும் அபாயங்களைப் புறக்கணிப்பது கடுமையான விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால், வீதி விதிகளைப் பின்பற்றி மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனைத்துச் சாரதிகளையும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects