தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடல் தொடர்பில் வெளியான செய்தி!

நீண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட அந்தப் பிளாஸ்டிக் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உற்பத்திச் செலவைக் குறைப்பதாகும்.

இருப்பினும், குறித்த பிளாஸ்டிக் கார்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது.

இதன் விளைவாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அச்சிடும் கார்டுகள் மற்றும் அச்சிடும் இயந்திரங்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலும் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் பலருக்கு தற்போது தற்காலிக அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டு வருகின்றது.

நவம்பர் மாத நடுப்பகுதியில் சில அச்சு இயந்திரங்கள் கிடைத்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்கமைய, அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளை வழமை போல் முன்னெடுக்க முடியும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects