மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளராக கி.திலகநாதன் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளராக கிருஷ்ணகோபால் திலகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, விவசாயத்துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், விவசாய அபிவிருத்தித் திட்டங்களைச் சிறந்த முறையில் முன்னெடுத்தல், விவசாயிகளின் தேவைகளைக் கண்டறிதல் மற்றும் விவசாயத்துறையின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியன இக்குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

இக்குழுவின் செயலாளராக மாவட்ட விவசாயப் பணிப்பாளராக செயற்படுவதுடன், பின்வரும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகச் செயற்படுவர்.
கமநல அபிவிருத்திப் பிரதி ஆணையாளர்.
பிரதி விவசாயப் பணிப்பாளர்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்.
மகாவலி அதிகாரசபையின் விவசாயப் பிரிவு பிரதி வதிவிடத் திட்ட முகாமையாளர்.
மாவட்ட ஏற்றுமதி விவசாயப் பிரதிப் பணிப்பாளர்.
வலயப் பொறுப்பு கால்நடை வைத்திய அதிகாரிகள்.
வலயப் பொறுப்பு உதவி விவசாயப் பணிப்பாளர்கள்.
கமநல அபிவிருத்திப் பிரதேச உத்தியோகத்தர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்படும் பிரதேச உறுப்பினர்கள் (விசேட கண்காணிப்புப் பொறுப்பு).
பனையோலை அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகள்.
தெங்கு அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகள்.
முந்திரிகை அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகள்.
தேவைக்கேற்ப ஏனைய விவசாயத் திணைக்களங்கள் மற்றும் கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறையை ஒருங்கிணைத்து அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் இவ்வாறானதொரு குழு அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவின் ஊடாக மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதே வேளை விவசாயம், காணி, கால் நடைகள், நீர்ப்பாசனம் ஆகிய அமைச்சுக்களின் இணைப்பாளராகம், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராகவும் கி.திலகநாதன் செயற்பட்டு வருகின்றமை குறி்ப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects