ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்துக்கு அமைய, அவர் 02.11.2026 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் சிறப்புப் பட்டம் மற்றும் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் பிட்டவல, சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருட்கள் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
மேலும், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வில், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, கிழக்கு மாகாண ஆளுநரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஜயந்தலால் ரத்னசேகர உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் கல்விசார் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









