நாடளாவிய ரீதியில் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால், இம் மாதம் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அண்மைய டெங்கு நோயாளர் எண்ணிக்கை, நுளம்பு பெருக்கம் தொடர்பான ஆய்வுக் குறியீடுகள் மற்றும் மாறிவரும் காலநிலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, டெங்கு நோய்ப் பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சார்பில், சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் விளம்பரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் இதனை அறிவித்துள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை பொலிஸார், முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects