நாட்டின் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்புகள் 03.11.2026 அன்று மாலை 4 மணி முதல் இன்று (04.11.2026) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாய நிலை 1
பதுளை மாவட்டம்:
வெலிமடை, மீகஹகிவுல, பஸ்ஸறை மற்றும் கந்தகெட்டிய.
கண்டி மாவட்டம்:
தொலுவ, தும்பனே, மெததும்பர, யட்டிநுவர, மினிப்பே மற்றும் ஹத்தலியத்த.
கேகாலை மாவட்டம்:
அரணாயக்க, மாவனெல்ல, ருவன்வெல்ல, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் கேகாலை.
குருநாகல் மாவட்டம்:
ரிதீகம மற்றும் இப்பாகமுவ.
மாத்தளை மாவட்டம்:
பல்லேபொல.
நுவரெலியா மாவட்டம்:
கொத்மலை மேற்கு, அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, வலப்பனை மற்றும் நோர்வூட்.
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
அபாய நிலை 2
பதுளை மாவட்டம்:
எல்ல, ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை.
கண்டி மாவட்டம்:
உடுநுவர மற்றும் உடுதும்பர.
மாத்தறை மாவட்டம்:
கொட்டபொல.
நுவரெலியா மாவட்டம்:
நில்தண்டாஹின்ன.
இரத்தினபுரி மாவட்டம்:
கலவான மற்றும் கொடகவெல.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மலைச்சரிவுகள், பாறைகள் மற்றும் நிலத்தில் ஏற்படும் வெடிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









