பஸ்களில் அதிக சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் பேரூந்துகளினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து இவ் வேலைத்திட்டத்தை தயாரிக்கவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பேரூந்துகளில் ஒலி நாடாக்கள் அதிக ஒலியுடன் இயக்கப்பட்டால் அதற்கு எதிராக செயற்படும் திறன் போக்குவரத்து பொலிஸாருக்கு இருப்பதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇