இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தோன்றுவது போன்ற தோற்றத்தில், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான காணொளிகள் மற்றும் விளம்பரங்கள், குறிப்பாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
எனவே, இவ்வாறான மோசடியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அவற்றின் ஊடாக முன்வைக்கப்படும் நிதி ஆலோசனைகள், முதலீட்டு வாய்ப்புகள் அல்லது ஏனைய கூற்றுகளின் அடிப்படையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிமுறைகளைப் பயன்படுத்துமாறும், தவறான வழிநடத்தும் காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










