சுகாதார சேவையின் உண்மையான மனிதவளத் தேவைகளை அடையாளம் கண்டு, முறையான நியமனங்களை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையின் மனிதவளத் திறனை மேலும் வலுப்படுத்தி, மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் நிர்வாக மற்றும் செயல்பாடுகளைத் திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் 4 சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வு 14.11.2026 அன்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்: 36 பேர், களஞ்சிய காப்பாளர் (Storekeeper): 27 பேர், சிறு சேவை கட்டுப்பாட்டாளர்: 06 பேர், சுகாதாரப் பணி உதவியாளர்: 154 பேர் கடந்த காலத்தில் தேர்தல்களை இலக்காகக் கொண்டு அரசியல் நோக்கங்களுக்காகவே நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசு அரசியல் செல்வாக்குகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உண்மையான மனிதவளத் தேவைகளைக் கருத்திற் கொண்டே நியமனங்களை வழங்குவதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இம்மாதம் முடிவதற்குள் 1,600 ஆரம்பநிலை மருத்துவ அதிகாரிகளை (Primary Grade Medical Officers) சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய நியமனதாரர்களுக்கும் அரசின் சம்பள சீர்திருத்தங்களின் பலன்கள் கிடைக்குமெனவும் ஜனவரி மாதம் முதல் அடிப்படைச் சம்பள உயர்வும், ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் உயர்வும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே வருடாந்தம் சுமார் ரூ. 900 பில்லியன் செலவிடப்படுகிறது.
இது பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் என்பதால், அரச ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி குணவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









