அகில இலங்கை சங்கீத மற்றும் நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட கல்முனை கலாசார மத்திய நிலையம்!

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய “பிரதீபா” அகில இலங்கை சங்கீத, நடனப் போட்டியில் கல்முனை கலாசார மத்திய நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற கல்முனை கலாசார மத்திய நிலைய மாணவர்கள், தேசிய மட்டத்திலும் தமது கலைத்திறமைகளைச் வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி ஜெனீத்ரா தேவச்சந்திரனின் ஏற்பாட்டிலும், வளவாளர் திருமதி சர்மினி சுதாகரனின் நெறியாள்கை மற்றும் வழிப்படுத்தலிலும் “கண்ணகி வழக்குரை” எனும் நாட்டிய நாடகம் இப்போட்டியில் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்வில் அ. கல்யாண்சரன், திருமதி கோஷல்லியா பிரமீன் மற்றும் என். குகன் ஆகியோர் வாய்ப்பாட்டு மற்றும் பக்கவாத்திய இசைப் பங்களிப்புகளை வழங்கினர்.

அத்துடன், ரஞ்சிதன் மதுரா, சிவானந்தன் மியோளினா, ராஜகுமார் டதுஸ்னி, மகேந்திரன் கிவோக்சிகா, ஜீவராசா நாகசதா, கேந்திரன் திலுக்ஷியா, கருணாநிதி யர்ஷிகா மற்றும் கிருஷ்ணமூர்த்தி லோஜி ஆகிய மாணவர்கள் இந்நாட்டிய நாடகத்தில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects