தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் (International Bodybuilding Championship) வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உடற்கட்டழகு போட்டிகளில் திறம்படச் செயல்பட்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை தேடித்தந்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்த வெற்றியாளர்களை வரவேற்பதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்குச் சென்றிருந்தது.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நாமத்தை உயர்த்திய இந்த வீரர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










