நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் – மத்திய சுற்றாடல் அதிகார சபை

யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று (19.11.2026) காலை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 7.05 மணியளவில் பத்தரமுல்லையில் 179 ஆகவும், கிளிநொச்சியில் 158 ஆகவும், அநுராதபுரத்தில் 158 ஆகவும், திருகோணமலையில் 151 ஆகவும், சிலாபத்தில் 165 ஆகவும் உயர் அளவுகள் பதிவாகியுள்ளன.

இப்பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குத் தீங்கான மட்டத்தில் காணப்படுவதால், மக்களுக்குச் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளிலுள்ள சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ள நபர்கள் KN 95 ரக முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், திறந்தவெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects