மட்டக்களப்பு களுவன்கேணியில் பாரதி விளையாட்டுக் கழகம் மற்றும் களுவன்கேணி விவேகானந்தா மகா வித்தியாலய சாரண மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் 21.11.2026 அன்று நடைபெற்றது.
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், சத்திரசிகிச்சைக்கு உட்படும் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காகக் குருதி தேவைப்படும் நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன், வைத்தியசாலையின் குருதித் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இம்முகாமின் பிரதான நோக்கமாக அமைந்தது.ம் என தெரிவிக்கப்பட்டது.
களுவன்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தின் அதிபர் தேவராசா பிராத்தனன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக் குழுவினர் கலந்துகொண்டு இரத்ததான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பாடசாலை சாரண அணியினர், களுவன்கேணி பாரதி இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









