இன்று வானில் நிகழும் அதிசயம் – மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

இன்று ( 24.11.2026) இரவு வானில் ‘பீவர் சூப்பர் மூன்’ (Beaver Supermoon) காட்சியளிக்கவுள்ளது.

அடுத்தடுத்து வரவுள்ள மூன்று தொடர்ச்சியான முழு நிலவு நிகழ்வுகளில் இது முதலாவதாகும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இலங்கை மற்றும் இந்திய நேரப்படி இன்று இரவு 8:23 மணிக்கு நிலவு முழுமையான பௌர்ணமி நிலையை அடைகிறது. அப்போது நிலவு பூமியிலிருந்து சுமார் 3,60,765 கிலோ மீற்றர் தொலைவில் மிக அருகில் காணப்படும். தீவுகள் ஆராயுங்கள்

நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் பெரிஜி நிலைக்கு அருகில் இருப்பதால், ஆண்டின் மிகச் சிறிய பௌர்ணமியுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலவு 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் குளிர்காலத்திற்காக ‘பீவர்’ எனப்படும் நீர்நாய் இன விலங்குகள் தமது இருப்பிடங்களைத் தயார்படுத்திச் சுறுசுறுப்பாகச் செயல்படும் காலம் என்பதால், இந்தப் பௌர்ணமி ‘பீவர் மூன்’ என அழைக்கப்படுகிறது.

எப்போது, எவ்வாறு பார்ப்பது?

இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின் கிழக்கு அடிவானத்தில் நிலவு உதிக்கும்போது, ‘நிலவு மாயை’ காரணமாக அது வழக்கத்தை விட மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில், எவ்விதத் தொலைநோக்கியும் இன்றி வெறும் கண்களாலேயே இன்று இரவு முழுவதும் இந்த அரிய நிகழ்வைக் கண்டு இரசிக்கலாம்.

மேலும், இரவு நிலவுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் பிரகாசமாகத் தெரியும்.

அடுத்தடுத்த சூப்பர் மூன் நாட்கள்

இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 திகதிஆண்டின் மிகப் பெரிய சூப்பர் மூனும் (Cold Moon), அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அன்று மற்றொரு சூப்பர் மூனும் (Wolf Moon) வானில் தோன்றவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects