மாற்றுத்திறனாளிகள் டிசம்பர் 3 ஆம் திகதி இலவசமாக மெட்ரோ பேருந்து சேவைகளில் பயணிக்க முடியும் – போக்குவரத்து அமைச்சர்

மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்து சேவைகளில் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இந்தச் சலுகை வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் இன்று (27.11.2026) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் (LMT) முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் தலைவர், நிறுவனப் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects