கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இதற்கமைய, உயர் தரப்பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் என்பனவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇