ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் எம்.வை.எம் நஸிர் தலைமையில் பரிசளிப்பு நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் 29.12.2023 அன்று இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலி சாகிர்மௌலானா கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் மேலும் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளயூத், மட்டக்களப்பு மத்தி வலயக் பிரதி கல்விப் பணிப்பாளர் ரிஃப்ஹா மற்றும் எம். எச்.எம் ரமிஸ் மற்றும் பிரமுகர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் மேற்கொண்டு புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிகள், க.பொ.த சாதாரணதரத்தில் 9ஏ, 8ஏ சித்தி பெற்ற மாணவிகளும், க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களிற்கான கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இதன் போது அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
2023ம் வருடம் தேசிய ரீதியில் இடம் பெற்ற 20 வயதிற்குட்பட்ட எறிபந்து போட்டியில் இப்பாடசாலை மாணவிகள் வெற்றி பெற்றதுடன் 13 வயதிற்குற்பட்ட எறிபந்து போட்டில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.