இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தகுதிகளை மறுபரிசீலனை செய்ய தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை போக்குவரத்து சபை தமது ஊழியர்களின் தகுதிகளை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த செயல்திட்டம் இன்று (16.02.2026) ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.

தொழிலாளர் வெற்றிடங்கள் பொது போக்குவரத்து துறையை கணிசமாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் 350 க்கும் மேற்பட்ட பேருந்துகளை தினமும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects