பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் திருத்த பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹாவின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 27.03.2025 அன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை எட்டரை மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், பேலியகொடை, வத்தளை, ஜா- எல , கட்டுநாயக்க , சீதுவை, களனி, பியகம,மஹர, தோம்பே, கந்தானை, மினுவாங்கொடை , கம்பஹா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










