ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்க இதனை தெரிவித்தார்.
அத்துடன், துணை தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇